அரசு கட்டுமான பணிக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வை கணக்கிட்டு கூடுதல் தொகை வழங்க வேண்டும்- மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் மனு

அரசு கட்டுமான பணிக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வை கணக்கிட்டு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-08-20 21:19 GMT

ஈரோடு

அரசு கட்டுமான பணிக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வை கணக்கிட்டு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் மனு கொடுக்கப்பட்டது.

அரசு கட்டுமான பணி

மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரி கிஷன் ரெட்டி நேற்று முன்தினம் ஈரோடு வந்தார். அப்போது அவரை, ஈரோடு பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.என்.நடராஜன் தலைமையில் துணைத்தலைவர் பூபதி, ஆடிட்டர் ரவீந்திரன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்ததாவது:-

47-வது ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டத்தில் அனைத்து அரசு கட்டுமான பணிகளுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியில் இருந்து 18 சதவீதமாக கடந்த ஜூலை 18-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசு கட்டுமான பணி டெண்டருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யை கணக்கிட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

pett

ஈரோடு மாவட்டம் இந்திய வரலாற்றில் தனித்துவம் பெற்றதாக தமிழ் கலாசாரத்தில் பிரதிபலிக்கிறது. இங்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித தலங்களான பவானி சங்கமேஸ்வரர் கோவில் பவானிகாவிரி ஆறுகள் இணையும் இடமான கூடுதுறையில் உள்ளது.

இதேபோல் காவிரி ஆற்றில் நடுவே நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தலங்களுக்கு உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 730 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால், மண்ணால் கட்டப்பட்ட பவானிசாகர் அணை, பவானி ஆற்றின் நடுவே அமைந்துள்ள கொடிவேரி அணை, வெள்ளோடு ஏரியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் போன்றவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்