கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 215 மனுக்கள் குவிந்தன

Update: 2023-04-24 19:00 GMT

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 215 மனுக்கள் குவிந்தன.

மின் இணைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 215 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

உடனடி நடவடிக்கை

இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்