நல்லூர் பேச்சி அம்மன் கல்ஹார கோவில் கும்பாபிஷேக விழா

நல்லூர் பேச்சி அம்மன் கல்ஹார கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2023-05-28 11:34 GMT

திருப்பூர்

திருப்பூர் நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பேச்சி அம்மன் கல்ஹார கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 1-ந் தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது.

பேச்சி அம்மன் கோவில்

திருப்பூர் மாநகர் நல்லூர் கிராமம் மணியக்காரம்பாளையம் நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளது பேச்சி அம்மன் கல்ஹார கோவில். இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் கடந்த 24-ந் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, கிராம தேவதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியும், மாலை கிராம சாந்தியும் நடைபெற்றது. கடந்த 25-ந் தேதி காலை விக்ேனஷ்வர பூஜையுடன் தொடங்கி மஹா சங்கல்பம், ஆசார்ய அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கணபதிஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடந்த 26-ந் தேதி மாலை வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, பிரவேசபலி உள்ளிட்ட பூைஜகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடந்த 27-ந் தேதி அதிவாச கிருபை, கோபூஜை, அஸ்வபூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம்

கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை மணியக்காரம்பாளையம், நல்லூர், கணபதிபாளையம், விஜயாபுரம், பள்ளக்காட்டுப்புதூா், ராக்கியாபாளையம், அத்திமரத்துப்புதூர், காசிபாளையம் உள்ளிட்ட 8 ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், குதிரை, பசு, கன்றுக்குட்டி ஆகியவற்றை அழைத்துசென்று பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பக்தர்கள் தீர்த்தக்குடம் சுமந்தும் நல்லூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று பேச்சி அம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர் கோவிலில் மிருத்சங்கிரஹனம், தீர்த்த சங்கிரஹனம், அக்னி சங்கிரஹனம் ஆகிய பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) மாலை கோவிலில் அம்மன் யாகசாலை எழுந்தருளல், முதற்கால யாக வேள்வி ஆகியவை நடைபெற உள்ளது. பூஜைகள் முடிந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 2-ம் கால யாகம பூஜை, விமான கோபுர கலசம் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. நாளை மறுநாள்(புதன்கிழமை) 4-ம் கால யாக பூஜை நடைபெற்று பேச்சி அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது.

கும்பாபிஷேக விழா

ஜூன் 1-ந் தேதி(வியாழன்) காலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகளும், காலை 7.35 மணிக்கு யாத்ரா தானம், கலசங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வருதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. காலை 7.45-க்கு மேல் 9 மணிக்குள் மிதுன லக்னத்தில் விமான கோபுர கும்பாபிஷேகம், பேச்சி அம்மன் மூலாலயம், விநாயகர், செல்லாண்டியம்மன், கன்னிமார் சாமிகள், கருப்பணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அலங்கார பூஜைகள் நடைபெற்று சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அடுத்ததாக முளைப்பாரி நீர்த்துறை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மணியக்காரம்பாளையம், நல்லூர், கணபதிபாளையம், விஜயாபுரம், பள்ளகாட்டுப்புதூா், ராக்கியாபாளையம், அத்திமரத்துப்புதூர், காசிபாளையம் உள்ளிட்ட 8 ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்