பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்

Update: 2022-08-14 16:37 GMT

கள்ளக்குறிச்சி

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சசிகுமார், செயலாளர் சங்கர், அவைத்தலைவர் பெருமாள், இளைஞரணி தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி தலைவர் நக்கீரன் வரவேற்றார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் ஆவின் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், சென்னை போயஸ் கார்டன் பகுதிக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் என்று பெயர் சூட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் பிரபாகரன், அவைத் தலைவர் அற்புதம், அமைப்பு செயலாளர் குருசாமி, தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், இளைஞரணி செயலாளர் விக்டர் விஜய், செய்தி தொடர்பாளர் சந்தானம் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்