பெருந்துறை ஆர்.எஸ். நுழைவு பாலம் பகுதியில் பராமரிப்பு பணி

சென்னிமலை அருகே பெருந்துறை ஆர்.எஸ். ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-20 21:39 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே பெருந்துறை ஆர்.எஸ். ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி

பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் ெரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலம் உள்ள பகுதியில் சாலை பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது. ஆனால் இதற்கான பராமரிப்பு பணிகளை ெரயில்வே நிர்வாகம் சார்பில் இதுவரை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் நுழைவு பாலம் பகுதியில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) முதல் பெருந்துறையில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ். வழியாக வெள்ளோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் இருந்து புத்தூர் வழித்தடத்தில் சென்று கொளத்துபாளையம் ரெயில்வே பாலத்தில் நுழைந்து செம்மாண்டம்பாளையம் வழியாக வெள்ளோடு செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சாலை பராமரிப்பு பணிகள் ஒரு வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்