பெருந்துறை மருத்துவ கல்லூரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்
பெருந்துறை மருத்துவ கல்லூரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை
பெருந்துறை மருத்துவ கல்லூரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 157 தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 36 பேர் தூய்மை பணியில் இருந்து வேறு வேலைக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 121 பேருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
3-வது நாள் போராட்டம்
ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்தும், தினசரி கூலி ரூ.712-க்கு பதில் ரூ.350 மட்டுமே வழங்கப்படுவதையும், வார விடுமுறை விடாமல் அனைத்து நாட்களிலும் தூய்மை பணியாளர்களிடம் வேலை வாங்குவதையும் கண்டித்தும், தொழிலாளர் பணி ஒப்பந்த சட்டத்தை அமல்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த 24-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. 21 பெண் தூய்மை பணியாளர்கள் உள்பட மொத்தம் 35 பேர் ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.