பெருமாள் கோவில் தேரோட்டம்
வடசேரி கிராமத்தில் பெருமாள் கோவில் தேரோட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் உள்ள செங்கமலவள்ளி தாயார் சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கல் ஜோலார்பேட்டை தேவராஜ், ஆம்பூர் வில்வநாதன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.