பொன்னேரியில் பெருமாள் கோவில் தேரோட்டம்
பொன்னேரியில் ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் அடங்கிய திருவாயர்பாடி கிராமம். இங்கு புகழ்பெற்ற ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் அகத்தீஸ்வரும், கரிகிருஷ்ண பெருமாளும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் 'ஹரிஹர' விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று எட்டாம் நாளில் விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி கரிகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மர தேரில் வீற்றிருந்த கரிகிருஷ்ண பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தேரோட்டத்தை காண பொன்னோரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கரிகிருஷ்ண பெருமானை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பொன்னேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.