அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்கு
அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ேதாகைமலை அருகே உள்ள தொண்டமாங்கினம் ஊராட்சி கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 55). இவர் அரசுக்கு சொந்தமான பொதுப்பாதையில் தடுத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கிருஷ்ணன், தாசில்தார் முனியராஜை பணி செய்யவிடாமல் தடுத்தும், தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முனியராஜ் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.