போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?
திருச்சுழியில் போக்குவரத்து ெநரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சுழி,
திருச்சுழியில் போக்குவரத்து ெநரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்து ெநரிசல்
திருச்சுழி ஊராட்சியில் உள்ள அனைத்து சாலைகளின் ஓரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் நகரின் முக்கியச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழியில் போக்குவரத்து மிகுந்த சாலையில் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி, அரசு அலுவலகங்கள். கடைகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதேபோல பஜார் பகுதியிலும் கடைகள் அதிகமாக அமைந்துள்ளன.
நடவடிக்கை
சுற்றுப்புறகிராம மக்கள் தங்களுக்கு தேவையானபொருட்களை வாங்க கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து நிறைந்த சாலை மற்றும் அதன் அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன.
மேலும் நடந்து செல்லும் பொது மக்களும், சைக்கிளில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் சாலையோரம் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். எனவே நகரில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் கொண்ட போக்குவரத்து போலீஸ்நிலையம் அமைத்து போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.