மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை

மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.;

Update: 2023-05-08 19:43 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி அருகே புல்வாய்க்கரை கிராமத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது இந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது சிப்காட் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை கொண்டு வருகிறோம். திருச்சுழி தொகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, உடல்நலத்தை கெடுக்கக்கூடிய, விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஆலைகளையும் செயல்பட அனுமதிக்க மாட்டோம். அ.முக்குளம் உண்டுறுமி கிடாக்குளம்பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவ கழிவுகளை எரியூட்டும்ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்