பெரியார் பிறந்தநாளில் ஊர்வலம்: தி.க. மாவட்ட செயலாளர் மீது வழக்கு

தேனியில் பெரியாா் பிறந்தநாளில் ஊர்வலம் சென்ற தி.க. மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

Update: 2022-09-18 13:15 GMT

பெரியார் பிறந்தநாளையொட்டி தேனியில் நேற்று சமூக நீதி எழுச்சி ஊர்வலம் நடந்தது. இதில் தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று, பெரியார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், இந்த ஊர்வலம் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்ததாக தி.க. மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட சிலர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்