பெரியாரின் 145-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-09-17 05:29 GMT

சென்னை,

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்தநாளையொட்டி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட திமுக அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் ஏராளமான திமுகவினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்