பெரியார் நினைவு தினம்

பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2022-12-24 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றியம் பெரியார் சமத்துவபுரத்தில் தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில், பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நகர செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி தம்பு ராஜ், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை நகர தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர தி.மு.க. செயலாளர் வே.ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கு.ஆறுமுகசாமி, முன்னாள் நகர செயலாளர் பூல்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி அப்துல்காதர் கலந்துகொண்டு அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்