பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வருசாபிஷேகம்
பெரியகுளம் தென்கரை வராக நதிக்கரையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது;
பெரியகுளம் தென்கரை வராக நதிக்கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ராஜேந்திர சோழிஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணிய சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.