பெரியகுளம் நகராட்சி பகுதியில்10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பெரியகுளம் நகராட்சி பகுதியில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில், பெரியகுளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் சேகரித்து வைத்திருக்கும் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோழி இறைச்சி, மீன் விற்பனை மற்றும் உணவகங்களில் ஆய்வு நடந்தது. அப்போது தடை செய்யப்பட்ட சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 10 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன்முகமது, சுகாதார மேற்பார்வையாளர், பணியாளர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, சேமித்து வைக்கப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படுவதுடன் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.