பெரியகுளம் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-05-11 18:45 GMT

பெரியகுளம் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கீழவடகரை பிரிவு அரசு மருத்துவமனை மின்பாதையில் விரிவாக்க பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கீழவடகரை பகுதியான ஸ்டேட் பேங்க் காலனி, கோல்டன் சிட்டி, சுந்தர்ராஜ் நகர், கரட்டூர், தெய்வேந்திரபுரம் மற்றும் பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்