பெரியகுளம் பகுதியில்மாங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

பெரியகுளம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-16 18:45 GMT

பெரியகுளம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இங்கு செந்தூரம், பங்கனபள்ளி, காளைப்பாடி, காசா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்காய்கள் விளைச்சல் அடைகின்றன. இந்த மாங்காய்கள் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் மாங்காய் சீசன் கடந்த மே மாதம் முதல் தொடங்கியது. இங்கு பறிக்கப்படும் மாங்காய்கள் கிருஷ்ணகிரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பழச்சாருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒரு டன் காசா மாங்காய் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ஒரு டன் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் தற்போது மாங்காய் கருப்பு நிறமாக மாறியதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். மேலும் வருங்காலங்களில் சந்தைப்படுத்துதல், மா தொழிற்சாலை அமைக்கும் பணிகளை அரசு உடனடியாக மேற்கொண்டு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்