மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
வேப்பனப்பள்ளியில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வேப்பனப்பள்ளி,:
வேப்பனப்பள்ளி குப்பம் சாலையில் இஸ்லாமிய சமூகத்தின் மயானத்திற்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, சைலேஷ் கிருஷ்ணன், கவுன்சிலர் சாமண்ணா, ஊராட்சி மன்ற தலைவர் கலில், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்ரிநாதன், பொறியாளர் குமார், ஜமாத் தலைவர் சம்சுதீன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முனாப், சாகிர், அஜ்மல், முகமத், ராமு, பசவராஜ், யஸ்வந்த், ராகேஷ், மஞ்சு, ராஜேஷ், பதி, கிஷோர் மற்றும் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.