பெரியசாமிபுரம் யூனியன் தொடக்கப்பள்ளியில்தொடுதிரை கணினி டிஜிட்டல் போர்டு திறப்பு விழா

பெரியசாமிபுரம் யூனியன் தொடக்கப்பள்ளியில் தொடுதிரை கணினி டிஜிட்டல் போர்டு திறப்பு விழா நடந்தது.

Update: 2023-09-22 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த பெரியசாமிபுரம் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தொடுதிரை கணினி டிஜிட்டல் போர்டு திறப்பு விழா நடைபெற்றது. இதனை மாவட்ட கவுன்சிலர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, கிளைச் செயலாளர் முருகன், பள்ளி தலைமையாசிரியர் ஜோசப், உதவி ஆசிரியை சாந்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருமங்களக்குறிச்சி நடுத்தெருவில் மாவட்ட கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்