ஏலகிரிமலையில் யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏலகிரிமலையில் யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
ஜோலார்பேட்டை,
ஏலகிரிமலையில் யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
உலக யோகா தினத்தையொட்டி ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் ஏலகிரிமலை ஊராட்சியில் அத்தனாவூர் பகுதியில் உள்ள கோடைவிழா அரங்கத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், '' மனிதர்கள் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுள் வரை வாழ யோகா வழிவகுக்கும். பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் யோகா செய்வதின் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். மேலும் டிரைவர்கள், பொதுமக்கள் அனைவரும் யோகாவை கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.
இதில் க.தேவராஜி எம்.எல்.ஏ., ஏலகிரிமலை ஊராட்சி தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிகளின் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பத்தூர் நகைக்கடை பஜார் தெருவில் நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர தலைவர் ஆர்.சண்முகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்் சந்திரசேகரன் யோகா பயிற்சி அளித்தார். நகைக்கடை உரிமையளர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யோகா பயிற்சி செய்தனர்.