ரூ.2 கோடி ஹவாலா பணம் எடுத்து வந்தவரிடம் பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

ரூ.2 கோடி ஹவாலா பணம் எடுத்து வந்தவரிடம் பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-02-17 10:43 GMT

சென்னை பெரம்பூர் ரெயில்நிலையத்துக்கு கடந்த 14-ந்தேதி ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடி ஹவாலா பணத்தை பயணி ஒருவர் எடுத்து வந்துள்ளார். இதனை பெரம்பூர் ரெயில்வே போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது, கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் பணத்தை கொண்டுவந்த பயணியிடம் பேரம் பேசியதாகத்தெரிகிறது.

இதுகுறித்து, ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குமார், போலீசாா் தினேஷ், சுதாகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்