பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 20 பேருக்கு இடம் கிடைத்தது.

Update: 2023-06-03 18:30 GMT

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கு முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், வேதியியல், இயற்பியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. தலா 40 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 560 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளை தவிர மற்ற பாடப்பிரிவுகளில் மொத்தம் 20 பேருக்கு இடம் கிடைத்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்