பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். சராசரி மழையளவை காட்டிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் பெய்த மழையளவு மொத்தம் 889.11 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு சராசரி மழையளவை காட்டிலும் 28.11 மி.மீ. கூடுதலாக பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மேலும் மழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை இல்லை.