பெரம்பலூர்: தீயில் கருகிய கார் உதிரிபாக கடை ,ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
பெரம்பலூரில் கார் உதிரி பாகம் மற்றும் டயர் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு வழிச்சாலையில் இளையராஜா என்பவர் ஓம்சக்தி வீல் எக்ஸ்பிரஸ் எனும் கார் உதிரி பாகம் மற்றும் டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று தீபாவளி என்பதால் இளையராஜா நேற்று இரவு முழுவதும் கடையில் இருந்து விட்டு காலை 6 மணிக்கு தான் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வந்திருக்கிறது. அப்போது அந்த பகுதியில் சென்றவர்கள் கடையில் இருந்து புகை வருவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.