பெரமனார் கோவில் கும்பாபிஷேக விழா

தாரமங்கலம் அருகே பெரமனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-12-04 19:43 GMT

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டியில் பெரமனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணகான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்