ஊருணியில் மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு

பாவூர்சத்திரம் அருகே ஊருணியில் மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.;

Update: 2023-08-19 19:24 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி பஞ்சாயத்து ஆரியங்காவூரில் உள்ள ஊருணியை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஊருணியின் கரையை பலப்படுத்துவதற்காக பழைய கற்கள், மண்ணை அள்ளி அகற்றி விட்டு, புதிய தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது.

இங்கிருந்து அகற்றப்படும் கற்கள், மண்ணை தனிநபருக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டு செல்வதாக கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊருணியில் திரண்டனர். ஊருணியில் இருந்து அகற்றப்படும் கற்கள், மண்ணை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கொட்டி சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து ஊருணியில் இருந்து கற்கள், மண்ணை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்