மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும்-சினேகன் பேச்சு

மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும்-சினேகன் பேச்சு

Update: 2022-09-03 19:52 GMT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல இளைஞர் அணி கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணை தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஆர்ஜூனர், முரளி அப்பாஸ் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி செயலாளரும், திரைப்பட கவிஞருமான சினேகன் கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சி குறித்தும், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் நீதி மய்யம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவோடு புது எழுச்சி பெறும். மக்கள் மனதில் எழுச்சி பெற்ற கட்சியாக மக்கள் நீதிமய்யம் தொடர்ந்து இருக்கிறது. மக்களுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறது. எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். கட்சியில் எந்தவித பிளவுகள் இன்றி, வருகிற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் மீண்டும் வலுப்பெறும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் அழகர், நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், செல்லபாண்டி உள்ளிட்ட மதுரை மண்டல இளைஞர் அணி அமைப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதுபோல், கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்