தூய்மைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி

பெரியகுளம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Update: 2022-09-24 18:36 GMT

பெரியகுளம் நகராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் 8-வது வாரத்தையொட்டி, 4-வது வார்டு பகுதியில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தியும், என் குப்பை என் பொறுப்பு என்கிற வகையில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சுமிதா தலைமை தாங்கினார். ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, சேகர், அரசு வக்கீல் சிவக்குமார் உள்பட நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்