விருத்தாசலம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்

விருத்தாசலம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் அமைச்சர் சி வெ கணேசன் தொடங்கி வைத்தார்

Update: 2022-06-07 18:04 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி விருத்தாசலம் திரு.வி.க. நகரில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். ஆணையர் சசிகலா, நகராட்சி துணைத் தலைவர் ராணி தண்டபாணி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நகர தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதிஆட்டோ பாண்டியன், நகர பொருளாளர் மணிகண்டன், வக்கீல் சரவணன், நகராட்சி கவுன்சிலர்கள் முத்துக்குமரன், ஷகிலா பானு, அன்சர் அலி, தீபா, பி.ஜி.சேகர், கரிமுன்னிசா, பக்கிரிசாமி மற்றும் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்