காரியாபட்டி, விருதுநகரில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்

காரியாபட்டி, விருதுநகரில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.;

Update: 2022-06-03 19:51 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி, விருதுநகரில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி

காரியாபட்டியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. இந்த திருமணம் மண்டபம் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். மேலும் காரியாபட்டி முதல்நிலை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழியை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதில் பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தையல் மிஷின், அரிசி, சேலை, வேஷ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களுக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் செய்திருந்தார்.

இதில் திருச்சுழி யூனியன் தலைவர் பொண்ணுத்தம்பி, காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ்தேவர், கு.கண்ணன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் சந்தனப்பாண்டி, மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலிபாரதி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் நகராட்சி சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அனைவரும் இந்த தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் பங்கேற்று தீவிர தூய்மை பணிகளை மேற்கொண்டு விருதுநகர் உள்ளிட்ட நமது மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சுற்றுப்புறத் தூய்மை அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதில் நகர்மன்றத்தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி, யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால், அரசு அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்