தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்ைத தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டு தூய்மைப் பணி செய்வது குறித்தும், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் தடை குறித்தும், கடை உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள், வணிகர்கள், பொது ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சரவணன், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.