மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகை அபிராமி அம்மன் சன்னதி தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செய்யதுஅனஸ் தலைமை தாங்கினார். மாநில பொறியாளர் அணி செயலாளர் வைத்தீஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் தனபாலன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் அனுராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, பிரான்சிஸ், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் செய்யதுசாகிப், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராம்பிரசாந்த், நகர துணை செயலாளர் ரூபகுமார் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் இளந்தமிழன் நன்றி கூறினார்.