மக்கள் நேர்காணல் முகாம்

வடவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.

Update: 2023-02-23 18:45 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே வடவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை உதவி கலெக்டர் பானோத்ரும்கேந்தர்லால் தலைமை தாங்கினார். நாகை தாசில்தார் ராஜசேகர் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், புதிய வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 137 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 78 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 59 மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் 73 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 162 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் வழங்கினார். இதில் ஊராட்சி மன்றத்தலைவர் மனோகரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் கனிமொழி, வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) புஷ்கலா, கிராமநிர்வாக அலுவலர் தினேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்