வலங்கைமான்:
வலங்கைமான் வருவாய் வட்டத்தில் உள்ள அனுகுடி, உத்தமதானபுரம், மூலால்வாஞ்சேரி மற்றும் நல்லூர் கிராமத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இன்று (புதன்கிழமை) நல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடக்கிறது .
இந்த முகாமில் பொதுமக்கள், விவசாயிகள் மாணவ-மாணவிகள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.