நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-06-07 20:10 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் 24 பேர் கலந்து கொண்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறினார். அப்போது துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் 26 பேர் கலந்து கொண்டு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்