மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து:பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு சென்ற பொதுமக்கள்

பெட்டியில் கோரிக்கை மனு

Update: 2023-01-23 19:30 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கும் வகையில் மனுக்கள் பெறும் பெட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்