மக்கள் குறை தீர்வு கூட்டம்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-15 16:37 GMT

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. குற்றப்பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நில அபகரிப்பு, குடும்ப பிரச்சினை, பண மோசடி உள்ளிட்டவைகள் குறித்த புகார்களே அதிகம் வந்திருந்தது. இதில் சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் தீர்வு காண்பது குறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்