மக்கள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு (ராணிப்பேட்டை), கோட்டீஸ்வரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.