மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 202 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2022-12-27 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.

இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலை வாய்ப்பு. முதியோர், மாற்றுத்திறனாளிகள். விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 202 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கும், காளி கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்பவருக்கும் தலா ரூ.8 ஆயிரம் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் கண்மணி, அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறை, டிச. 28-

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.

இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலை வாய்ப்பு. முதியோர், மாற்றுத்திறனாளிகள். விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கி கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 202 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கும், காளி கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்பவருக்கும் தலா ரூ.8 ஆயிரம் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் கண்மணி, அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்