காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.;
பொதுமக்களிடம் இருந்து 255 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் குறுவட்டம் கண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதிப்பில் SECC திட்டத்தில் வீட்டுமனை பட்டாக்களையும், காஞ்சீபுரம் வட்டத்திற்குட்பட்ட திருப்புக்குழி, சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ 38 லட்சத்து 97 ஆயிரத்து 400 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.