அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 302 மனுக்களை பெற்றார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் அரியலூர் நகர் கபிரியேல் தெருவை சேர்ந்த கண்ணன் மற்றும் பாரதி கொடுத்த மனுவில், தாங்கள் அரியலூர் நகரில் நடைபெற்ற ஜமாபந்தியில் தனிப்பட்டா மற்றும் கூட்டுப்பட்டா கேட்டு மனு அளித்தோம். ஆனால் இதுநாள் வரை சர்வேயர் வந்து நிலத்தை அழக்கவில்லை. எனவே தனிப்பட்ட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.