மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கினர். மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.