மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2022-08-17 19:07 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட 16 மனுக்களை வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதேபோன்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்