போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2022-10-20 19:03 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் அனிதா முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். தொடர்ந்து மனுக்களின் விவரங்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 22 மனுக்கள் பெறப்பட்டன.

இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்