சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அதன்படி முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தரப்பினர் மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 397 மனுக்கள் நேற்று பெறப்பட்டன. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளும் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.