மக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆக்கூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது

Update: 2023-04-19 18:45 GMT

திருக்கடையூர்:

ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கண்மணி, தனி தாசில்தார் சுந்தரி, துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆக்கூர், பண்டாரவாடை, உடையவர் கோவில்பத்து, மடப்புரம், முடிகண்டநல்லூர், திருச்செம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்