மக்கள் குறைதீர்க்கும் முகாம்

நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-10-01 18:45 GMT

வேதாரண்யம், வாய்மேடு, கரியாபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, தலைஞாயிறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க மக்கள் குறைதீர்க்கும் முகாம் வேதாரண்யத்தில் நடந்தது. முகாமிற்கு வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், ஜெயேந்திர சரஸ்வதி, ராதாகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 10-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்