அம்மாபேட்டை மண்டலத்தில்மக்கள் குறைதீர்க்கும் முகாம்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பங்கேற்பு

Update: 2023-09-05 20:23 GMT

சேலம்

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றனர். அதன்படி முதியோர் உதவித்தொகை, குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் ராஜா, கோபால், வக்கீல் லட்சுமணபெருமாள், நாகராஜ், வெங்கடேஷ், விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்