மக்கள் நீதிமன்றம்
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி திலகம் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் 48 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பேசி முடிக்கப்பட்டது. இதில் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 54 ஆயிரத்து 500 நஷ்ட ஈடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.